அன்புடையீர்.! ஆரூர் ஸ்ரீ பாலமுருகன் ஆலையம் ,1971 வருடம் தை மாதம் 13 –ம் தேதி தை பூச திருநாளில் (27.01.1971) பிரிதிஷ்டை செய்யப்பட்டு 49 ஆண்டுகளாக வணங்கப்பட்டு வருகின்றது .
இத்திருக்கோவில் 50
ஆம் ஆண்டு அடியெடுத்துவைப்பதை முன்னிட்டு
நமது ஆலயத்தின் அருகில் உலகிலேயே வேறு
எங்கும் அமைந்திடாத 12
அடி உயரமுடைய 6
முகம்,
12 கரங்களைக்
கொண்ட ஸ்ரீ விஸ்வருப பாலமுருகன் பிரம்மாண்ட கற்சிலை அமைக்கப்பட உள்ளது. பக்தர்களான
நீங்கள் , தங்களால் ஆனா நன்கொடை வழங்கி அதற்கான
ரசீது பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்
திருவுருவ வரலாறு:
கந்தபுராணத்தின்படி பாலமுருகன்
2 முறை விஷ்வரூபம் எடுத்து
காட்சியளித்துள்ளார் , போர்க்களத்தில்
கோபமாக அசுரனை வதைக்கும்போதும் , அசுரனை
வதைபதற்கு முன்பு சிறையில் அடைபட்டு துன்பப்பட்ட தேவர்களுக்கு, அசுரனை கொன்று, தேவர்களை காக்க தம்மால் முடியும் என்ற
நம்பிக்கையளிக்க வேலும் மயிலும்யின்றி
சிரித்த முகத்துடன் நம்பிக்கையின்
திருவுருவமாய் தேவர்களுக்கு
விஸ்வருபம் எடுத்து காட்சியளித்தார்.
திருவுருவ சிலையின் சிறப்புகள்
இத்தைகைய
நம்பிக்கையின் திருவுருவமாய்
திகழும் ஸ்ரீ விஸ்வருப பாலமுருகன் திருச்சீலை , பக்தர்கள் முருகனின் ஆறு முகத்தையம்
சுற்றிவந்து வழிபடுவதற்கு ஏதுவாக இவ்விடத்தில் அமையவுள்ளது. உலகிலேயே
இத்திருவுவ கற்சிலை 12 அடி
உயரத்தில் முதல் முறையாக இங்குதான் அமையவுள்ளது.
Sign up here with your email
ConversionConversion EmoticonEmoticon