பிள்ளைத்தமிழ் என்பது தமிழ் மொழியிலுள்ள 96 வகையான சிற்றிலக்கியங்களில் ஒன்று. இந்தப் பிள்ளைத்தமிழ் பத்து பருவங்களைக் கொண்டது. அவை;
1. காப்பு 2. செங்கீரை 3. தாலாட்டு 4. சப்பானி 5. முத்தம் 6. வருகை 7. அம்புலி 8. சிற்றில் சிதைத்தல் 9. சிறுபறை முழக்கல் 10. சிறுதேர் உருட்டல் என்பதாகும். முருகன் மேல் பாடப்பெற்ற பிள்ளைத்தமிழ் நூல்கள் இவை; 1. திருமலை முருகன் பிள்ளைத்தமிழ் - கவிராஜார் பண்டாரத்தையா 2. தணிகைப் பிள்ளைத்தமிழ் - கந்தப்ப தேசிகர் 3. மயிலம் முருகன் பிள்ளைத்தமிழ் - வைத்தியநாத தேசிகர் 4. பழநிப் பிள்ளைத்தமிழ் - விசையகிரிவேலச் சின்னோவையன் 5. சேயூர் முருகன் பிள்ளைத்தமிழ் - அந்தகக் கவிராயர் 6. போரூர் முருகன் பிள்ளைத்தமிழ் - சிதம்பர சுவாமிகள் 7. கிரிவிரிஞ்சை முருகன் பிள்ளைத்தமிழ் - மார்க்க சகாய தேவர் 8. திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ் - பகழிக்கூத்தர் 9. க்ஷேத்திரக் கோவைப் பிள்ளைத்தமிழ் - காஞ்சிபுரம் சிதம்பர முனிவர் 10. முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் - குமரகுருபர சுவாமிகள் |
Sign up here with your email
ConversionConversion EmoticonEmoticon